சூடான செய்திகள் 1

இ.போ.ச ஊழியர்கள் வேலைநிறுத்தம்

(UTV|COLOMBO)-அம்பலாந்தோட்டை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதல் இவர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் வேதன அதிகரிப்பை அடிப்படை வேதனத்துடன் சேர்த்தல் மற்றும் 750 ரூபாய் தினசரி வேதனத்தை பெறும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறும் வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக அம்பலாந்தோட்டை டிப்போவில் இருந்து 59 பேரூந்துகள் இன்றைய தினம் சேவையில் ஈடுபடவில்லை என அதன் முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

LIVE UPDATE: அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம் இதோ!

பாடசாலைகளில் இன்புளுவென்சா நோய் தொடர்பிலான விழிப்புணர்வு

புதிய ஆண்டை வரவேற்க நாடு பூராகவும் பல்வேறு நிகழ்வுகள்