சூடான செய்திகள் 1

மேலும் சில அமைச்சர்கள் சற்றுமுன் நியமனம்

(UTV|COLOMBO)-பொது நிர்வாகம் வீட்டு விவகாரங்கள் மற்றும் நீதி அமைச்சராக சுசில் பிரேமஜயந்த சற்று முன்னர் ஜனாபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

அதேபோல் பந்துல குணவர்தன சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும், எஸ்.எம் சந்திரசேன சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராகவும் பதவி பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக லக்ஷமன் வசந்த பெரேரா பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

மேலும் சுதேச மருத்துவதுறை இராஜாங்க அமைச்சராக சாலிந்த திசாநாயக்கவும், போக்குவரத்து இராஜங்க அமைச்சராக சி.பி ரத்நாயக்கவும் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.

 

 

 

 

Related posts

கம்போடியா மிதிவெடி அகற்றும் பிரிவினருக்கு இலங்கை இராணுவத்தினால் விழிப்புணர்வு வேலை நிகழ்ச்சி திட்டம்

பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான திகதி அறிவிப்பு

கஞ்சா கடத்தியவர் கைது