சூடான செய்திகள் 1

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை தொடரும்

(UTV|COLOMBO)-நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை கடந்த தினங்களில் நிலவிய கடும் மழையுடனான காலநிலையால், அனுராதபுரம் மாவட்டத்தின் நாச்சாதுவ, நுவரவௌ, கலாவௌ, ராஜாங்கனை, அங்கமுவ மற்றும் மஹகனதராவ ஆகிய நீர்நிலைகளின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அதில் இருந்து வெளியாக்கப்படும் நீர், மல்வத்துஓய, கலாஓய மற்றும் கனதராஓய ஆகியவற்றின் ஊடாக பயணிக்கின்ற நிலையில், அவற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் குறித்த நதிகளை அண்டிய பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் இன்றிலிருந்து ஆரம்பம்

ETI நிறுவன நிறைவேற்று குழு உறுப்பினர்கள் நால்வருக்கும் வெளிநாட்டு பயணத் தடை காலவரையின்றி நீடிப்பு

காங்கேசந்துறை பயணிக்கிறார் பிரதமர்