கேளிக்கை

சர்கார் படத்தின் எச்.டி இன்றே வெளியாகும்?

(UTV|INDIA)-நடிகர் விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு சர்கார் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் நிலையில், இந்த படத்தின் எச்.டி. பிர்ண்ட் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் நேற்று பதிவிடப்பட்டது.

இது பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே புதிய திரைப்படங்களை சட்டவிரோதமாக தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. இதனை தடுக்க தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், சர்கார் படம் தொடர்பாக தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டுள்ள சவாலை முறியடிப்போம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டது.

தற்போது தமிழ் ராக்கர்ஸ், சர்கார் படத்தின் எச்.டி.பிர்ண்ட் இன்றே வெளியாகும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்கள். இது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

Related posts

ஷகிலா படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ…

பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன் காலமானார்

இணையதளங்களுக்கு புதிய கட்டுப்பாடு – 3 ஆண்டு சிறை, 10 லட்சம் அபராதம்!