விளையாட்டு

இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியில் மீண்டும் லசித் மலிங்க?

 (UDHAYAM, COLOMBO) – இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியில் மீண்டும் லசித் மலிங்க இணைய வேண்டும் என்று, அணியின் பயிற்றுவிப்பாளர் க்ரஹம் ஃபோர்ட் தெரிவித்துளளார்.

உடல்நிலை பாதிப்பினால் ஓய்வில் இருந்த லசித் மலிங்க, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 20க்கு20 கிரிக்கட் போட்டித் தொடரில் மீண்டும் விளையாடி இருந்தார்.

20க்கு20 கிரிக்கட் போட்டிகளில் அவர் மீண்டும் இணைந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.

அவரது வருகை மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் இலங்கை அணியை பலப்படுத்தும்.

ஆனால் அவர் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பதாக இருப்பதாக க்ரகம் ஃபோர்ட் கூறியுள்ளார்.

Related posts

LPL ரசிகர்களுக்கு வாய்ப்பு

இலங்கை அணியினை சாடும் : முத்தையா

IPL 2021 : இலங்கை அணியின் 09 வீரர்கள் சாத்தியம்