வகைப்படுத்தப்படாத

Update :களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – இன்று காலை களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒரு சிறை அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் 3 பேர் நகொட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் சிறை அதிகாரி மற்றும் பிரபல பாதாளக் குழுவின் உறுப்பினரான சாந்த என்றழைக்கப்படும் சமயன் உள்ளிட்ட 5 கைதிகள் ஏற்கனவே உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சற்றுமுன்னர் களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சிறை அதிகாரி ஒருவர் மற்றும் பிரபல பாதாளக் குழுவின் உறுப்பினரான சாந்த என்றழைக்கப்படும் சமயன் உள்ளிட்ட 5 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

வழக்கு தொடர்பாக களுத்துறை சிறைச்சாலையில் இருந்து கடுவலை நீதிமன்றம் நோக்கி சென்று கொண்டிருந்த சிறைச்சாலை பேருந்து மீதே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கெப் வண்டியில் வந்த சிலரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மேலும் 4 பேர் காயமடைந்து நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக மருத்துவனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

___________________________________________________________________________

[accordion][acc title=”சற்றுமுன்னர் சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் – 6 பேர் பலி”][/acc][/accordion]

(UDHAYAM, COLOMBO) – சற்றுமுன்னர் களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சிறை அதிகாரி ஒருவர் மற்றும் பிரபல பாதாளக் குழுவின் உறுப்பினரான சாந்த என்றழைக்கப்படும் சமயன் உள்ளிட்ட 5 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

வழக்கு தொடர்பாக களுத்துறை சிறைச்சாலையில் இருந்து கடுவலை நீதிமன்றம் நோக்கி சென்று கொண்டிருந்த சிறைச்சாலை பேருந்து மீதே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கெப் வண்டியில் வந்த சிலரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

Maximum security for Esala Perahera

விரைவில் ஜனாதிபதியை சந்திக்க தயாராகும் ஜே.வி.பி

West Indies beat Afghanistan by 23 runs