சூடான செய்திகள் 1

நாலக சில்வாவிற்கு விசேட பாதுகாப்பு

(UTV|COLOMBO)-விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பாகவிருந்த முன்னாள் பிரிதிப் பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சந்தேகநபரான நாலக சில்வா தற்போது வெலிக்கடை சிறைச்சாலையின் விசேட சிறைக் கூடத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் பாதுகாப்புக்கு மேலதிகமாக சிறைச்சாலை அதிகாரிகள் பலர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையின் Y – O பிரிவில் விஷேட கூடமொன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அதிதிகளைப் பார்வையிடுவதற்கு, அங்கிருந்து பிறிதொரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக குறித்த சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மரண தண்டனை இரத்து: சிறிசேனவின் தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானது – உயர் நீதிமன்றம்

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு – குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தை 24 மணி நேரமும் இயக்க தீர்மானம்

editor

17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை

editor