வகைப்படுத்தப்படாத

கடுகதி ரயில் தடம்புரண்ட விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

(UTV|TAIWAN)-தாய்வான் நாட்டின் இலான் பகுதியில் நேற்று கடுகதி ரயில் தடம்புரண்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 130-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

360- க்கும் அதிகமான பயணிகள் பயணித்த குறித்த ரயிலின் முன்பகுதியில் இருந்த 8 பெட்டிகள் முற்றிலுமாக சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தடம்புரள்வதற்கு சில நிமிடங்கள் முன்னதாகவே அந்த ரயில் இயல்பு நிலைக்கு மாறாக குலுங்கியும், அதிர்ந்தும் ஓடிக் கொண்டிருந்ததாக அதில் வந்த சில பயணிகள் தெரிவித்துள்ள நிலையில் இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

Spider-Man: Far From Home චිත්‍රපටය ඇ.ඩො මිලියන 600ක් උපයයි.

Rajasinghe Central and Azhar College win on first innings