சூடான செய்திகள் 1

UPDATE-அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகளின் எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டது

(UTV|COLOMBO)-அகுணுகெலபெஸ்ஸ சிறைச்சாலையின் கோபுரம் ஒன்றின் மீது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் தங்களது ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுள்ளனர்.

அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.


பொலிஸ் அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் தொடர்ந்தும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த எதிர்பில் 50 பேர் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 45 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சின் குறித்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஹெரோயின் மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் கைது

கடும் வெப்பமுடனான வானிலை…

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]