கிசு கிசு

கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் இந்நாள் அமைச்சருமான அர்ஜுன மீது பாலியல் குற்றச்சாட்டு…

(UTV|COLOMBO)- இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய அமைச்சருமான அர்ஜுன ரணதுங்கா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது.

இந்திய விமானப் பணிப்பெண் ஒருவர் கடந்த 10ம் திகதி முகநூல் பக்கத்தில், இந்திய ஹோட்டல் ஒன்றில் நீச்சல் குளம் அருகே ரணதுங்கா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி உள்ளார்.

“ஹோட்டலின் நீச்சல் குளம் அருகே நடந்து சென்ற போது ரணதுங்கா என் இடுப்பை பிடித்து கொண்டு இழுத்து, என் மார்பின் பக்கமாக கைகளை கொண்டு வந்தார். மிகவும் அச்சம் அடைந்த நான், அவரது கால்களில் உதைத்தேன். இந்திய பெண்ணோடு தவறாக நடக்க முயற்சி செய்கிறார் என்று புகார் கூறி கடவுச்சீட்டை முடக்கி விடுவேன் என கூறினேன். அத்துடன் நேரத்தை வீணடிக்காமல் நான் வரவேற்பறையை நோக்கி வேகமாக ஓடி புகார் கூறினேன். இருந்தாலும் இது உங்கள் தனிப்பட்ட விஷயம் என்று அவர்கள் கைவிரித்துவிட்டனர்” என பதிவிட்டுள்ளார்.

Related posts

‘Miss Tourism World 2022’ இறுதிப் போட்டிகள் இலங்கையில்

மஹிந்த ராஜபக்ஷ குட்டுவதற்கு தகுதியானவர்

கொரோனா கண்டறிய Self Shield