சூடான செய்திகள் 1

புதிய அரசியலமைப்பு சபை இன்று(12) கூடுகிறது…

(UTV|COLOMBO)- புதிய பிரதம நீதியரசரை நியமிப்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எட்டுவதற்காக புதிய அரசியலமைப்பு சபை இன்று(12) நண்பகல் 12.00 மணிக்கு ஒன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அரசியலமைப்பு சபையின் பிரதிநிதிகளாக, சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மூவரின் பெயர்களுக்கு நேற்று(11) பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது.

அரசியலமைப்பு சபையில் அங்கம் வகிக்கும் 10 பேரில் பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் அடங்குகின்றனர்.

ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும், எதிர்கட்சி தலைவரின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் தலதா அத்துகோரலவும், சிறிய கட்சிகளை அங்கத்துவப்படுத்தும் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் புதிய அரசியலமைப்பு சபையின் சிவில் சமூக செயற்பாட்டாளர்களாக பேராசிரியர் ஜயந்த தனபால, சட்டத்தரணி அஹமட் ஜாவிட் யூஸுப் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகநாதன் செல்வகுமாரன், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சபையின் அதிகார காலம் 3 வருடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம்

பரீட்சைகளுக்கு தடங்கல் இல்லாத வகையில் பொதுத் தேர்தல் நடத்தப்படும்-அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

ரோஹித பொகொல்லாகமவின் மனைவி மற்றும் மகளை கைது செய்ய உத்தரவு