சம்மாந்துறை அல்-அர்சாத் மகா வித்தியாலயத்தில் க.பொ.த. சா/த பரீட்சையில் 9A உள்ளிட்ட சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று புதன்கிழமை காலை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
அதிபர் எம்.ஏ. ரஹீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களை கெளரவித்தார்.
இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான ஏ.எல்.எம். ஜிப்ரி, ஏ.எச்.எம். காலித், எம்.ஐ.எம். றிஸ்விகான், வை.எல். பஸீர், எஸ்.எல்.எம். பஹுமி, ஏ.எம்.எம். அப்னான், ஏ.சீ.எம். நயீம், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் வை.எல். பஸீர் அவர்கள், தனது சொந்த நிதியிலிருந்து பாடசாலைக்கு மின் விசிறிகள் சிலவற்றை அன்பளிப்பாக வழங்கினார்.
-ஷாதிர் ஏ ஜப்பார்