வகைப்படுத்தப்படாத

99 நாடுகள் மீது இணைய தாக்குதல் (cyber atack) : கணணி அமைப்பிற்கு கடும் பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – பிரபல இணைய தாக்குதல் காரணமான உலகின் 99 நாடுகளின் கணணி அமைப்பிற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த இணைய தாக்குதல் காரணமாக அமெரிக்கா , இங்கிலாந்து , ரஷ்யா , சீனா ,ஸ்பெயின் , இத்தாலி , தாய்வான் உள்ளிட்ட 99 நாடுகளின் கணணி அமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த இணைய தாக்குதல் மூலம் 300 டொலர் பிணைத் தொகை கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.

எவ்வாறாயினும் ,இணைய தாக்குதல் காரணமாக உலகம் முழுவதும் பல நிறுவனங்களின் இணையத்தள அமைப்புக்கள் தற்போதைய நிலையில் , பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ள பிரித்தானியாவின் சுகாதார சேவை அதிகாரிகள் இந்த இணைய தாக்குதல் காரணமாக பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் தொழில்நுட்ப வசதிகள் நாளுக்கு நாள் பெருகி வரும் அதே சமயத்தில், இணைய தாக்குதல்களால் தொழில்நுட்பங்கள் முடங்குவதும் அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மின்னணு சாதனங்களில் போதிய பாதுகாப்பு அம்சங்களை பொருத்தி வருகின்றனர்.

எனினும், இணைய தாக்குதல் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் இன்று பெரும்பாலான பகுதியில் தகவல் தொழில்நுட்பம் செயலிழந்தது.

இதன் காரணமாக பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.

குறிப்பாக, தேசிய சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

லண்டன், பிளாக்பர்ன், நாட்டிங்காம், கம்பிரியா மற்றும் ஹெர்ட்போட்ஷைர் ஆகிய பகுதிகளில் மருத்துவ அறக்கட்டளைகள் மற்றும் மருத்துவமனைகள் பாதிப்புக்கு உள்ளாகின.

மருத்துவ சேவை இணையதளங்கள் முடங்கியதால், மருத்துவ ஊர்திகளை குறித்த பகுதிகளுக்கு இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

சில மருத்துவமனை நிர்வாகம், நோயாளிகளுடன் வந்த  மருத்துவ ஊர்திகளை மற்ற மருத்துவமனைகளுக்கு திருப்பி விட்டன.

கணணியை இயக்கினால், ‘பிணைத் தொகை கொடுத்தால்தான் உங்கள் கணணிகள் செயல்படும்’ என திரையில் தோன்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே இது சைபர் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

Related posts

Sri Lanka likely to receive light rain today

அபித்ஜானில் மழை வெள்ளத்துக்கு 18 பேர் பலி

சர்வதேச ஊடகங்களின் இன்றைய ஹீரோ மஹிந்த……