உள்நாடுவிசேட செய்திகள்

950 டன் நிவாரண பொருட்களுடன் இலங்கை வரும் தமிழக மக்களின் உதவி

டித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ் நாடு அரசாங்கமும் நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது.

950 டன் நிவாரண பொருட்கள் இவ்வாறு தமிழ் நாடு மக்கள் சார்பாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிவாரணப் பொருட்களை தாங்கி வரும் கப்பலை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று (06) கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்களில் 10 ஆயிரம் போர்வை, 10 ஆயிரம் துண்டு, 5 ஆயிரம் வேஷ்டி, 5 ஆயிரம் சேலை, 1,000 தார்பாலீன் ஆகியவையும், 650 டன் பருப்பு, சர்க்கரை, பால்மா பொதிகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

தூத்துக்குடியில் இருந்து 300 டன் பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை அனுப்பப்படுகிறது.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் மொத்தம் 950 மெற்றிக் டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

டித்வா புயல் தாக்கம் காரணமாக இலங்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று பிற்பகல் வரை 611 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

உர இறக்குமதிக்கு 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – அமைச்சரவை அனுமதி

 தரம் 5 மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு தடை !

முச்சக்கர வண்டிகளுக்கு விசேட எரிபொருள் நிலையங்கள்