சூடான செய்திகள் 1

939.2 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

(UTV|COLOMBO)  நேற்று (24) மாலை மன்னார் நடுக்குடா கடற்கரை பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கொண்ட பொதிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 45 பொதிகளை கொண்ட பீடி இலைகளை இவ்வாறு கண்டு பிடித்துள்ளனர்.

மேற்படி மீட்கப்பட்ட பீடி இலைகளைக்கொண்ட பொதிகள் நடுக்குடா கடற்கரை பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கான யாழ்ப்பாணம் சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

 

 

Related posts

ஜனாதிபதி தலைமையில் ‘சித்திரை மாத உறுதிமொழி’ வைபவம் இன்று(03)

அவசர தகவல்களுக்காக இராணுவத் தலைமையகத்தை தொடர்பு கொள்ளவும்

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு