சூடான செய்திகள் 1

939.2 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

(UTV|COLOMBO)  நேற்று (24) மாலை மன்னார் நடுக்குடா கடற்கரை பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கொண்ட பொதிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 45 பொதிகளை கொண்ட பீடி இலைகளை இவ்வாறு கண்டு பிடித்துள்ளனர்.

மேற்படி மீட்கப்பட்ட பீடி இலைகளைக்கொண்ட பொதிகள் நடுக்குடா கடற்கரை பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கான யாழ்ப்பாணம் சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

 

 

Related posts

மரம் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்யும் கால எல்லை இன்றுடன் நிறைவு

களுத்துறையின் சில பிரதேசங்களுக்கு இன்று நீர் விநியோகம் தடை

நிலப் பதிவுகளை ஒரு நாளில் நிறைவு செய்யும் சேவை