வகைப்படுத்தப்படாத

90 சதவிகித விசாரணைகள் நிறைவு

(UDHAYAM, COLOMBO) – கடந்த அரசாங்க காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தற்போது 90 சதவிகிதம் நிறைவுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்சக்தி மற்றும் சக்தி வலு பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனை தெரிவித்தார்.

களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் பொருட்டு விசேட நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

 

Related posts

நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் தெரேசா மே வெற்றி

வௌ்ளவத்தை கட்டிட சரிவு : இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மேலும் இரண்டு பேரை மீட்கும் பணி தீவிரம்!

4-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்த பாங்கொக்