உள்நாடு

83 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது!

கனேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரகொல்ல பிரதேசத்தில் பல்வேறு நபர்களுக்கு சொந்தமான 83 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த ஆண் மற்றும் பெண் சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கணேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் வத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இலங்கை ரயில் சேவையின் அவசர அறிவிப்பு.

எழுத்தாளர் றியாஸின் 65 நூல்களின் அறிமுக விழா மற்றும் கண்காட்சி

editor

பல்கலைக்கழக மாணவர் மரணம் – மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸில் சரண்

editor