உள்நாடு

82 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு – 44 பேர் பலி

2025ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் மொத்தம் 82 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 48 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில், 62 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இடையிலான மோதல்களுடன் தொடர்புடையவை எனவும், மேலும் 20 சம்பவங்கள் பிற பிரச்சினைகளின் காரணமாக நடைபெற்றவை எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இன்றைய தினம் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி

எல்லோரிடமும் குறைகள் உண்டு – நாங்கள் அதை சரிசெய்வோம் – நாமல்

editor

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் மற்றும் 15% IT வரி விதிப்பு தொடர்பாக சபையில் சஜித் கேள்வி

editor