வகைப்படுத்தப்படாத

82 வயதில் சிறையிலிருந்தே 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற ஹரியானா முன்னாள் முதல்வர்

(UDHAYAM, COLOMBO) – ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்திய ஹரியானா மாநில முன்னாள் முதல் அமைச்சர் ஓம்பிரகாஸ் சௌடாலா, தமது 82வயதில் இந்தியாவின் 12-ம் வகுப்பு பரீட்சை எழுதி அதில் சித்தியடைந்துள்ளார்.

இவர் ஹரியானாவில் நான்கு தடவைகள் முதல் அமைச்சராக பணியாற்றினர்.

இந்தக்காலப்பகுதியில் ஆசிரியர் நியமனங்களில் தகுதியுள்ளவர்களுக்கு தொழில் வழங்காமல், பணத்துக்காக தகுதியற்றவர்களுக்கு தொழில்களை வழங்கிய குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது.

இந்தக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டநிலையில் அவரும் 54 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.

இதனையடுத்து அவர் புதுடில்லி சிறைச்சாலையை நூலகமாக பயன்படுத்தியதாக அவரின் புதல்வர் தெரிவித்துள்ளார்.

Related posts

Navy apprehends 4 persons with Kerala cannabis in Southern seas [VIDEO]

India building collapse: Dozens trapped in south Mumbai

விரைவில் ஜனாதிபதியை சந்திக்க தயாராகும் ஜே.வி.பி