2025ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் மொத்தம் 82 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 48 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில், 62 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இடையிலான மோதல்களுடன் தொடர்புடையவை எனவும், மேலும் 20 சம்பவங்கள் பிற பிரச்சினைகளின் காரணமாக நடைபெற்றவை எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.