8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாயத்திற்கான முன்னெச்சரிக்கை அறிவித்தலை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ளது.
இன்று (17) இரவு 7:00 மணி முதல் நாளை (18) இரவு 7:00 மணி வரையிலான அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கவனம் செலுத்துமாறு அறிவிக்கப்படும் இரண்டாம் நிலை எச்சரிக்கை வௌியிடப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பதுளை மாவட்டம்: ஹல்துமுல்ல
கேகாலை மாவட்டம்: அரநாயக்க
அதன்படி, மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவித்து, முதல் நிலை எச்சரிக்கை வௌியிடப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் பின்வருமாறு:
பதுளை மாவட்டம்: பண்டாரவெல, ஹப்புத்தளை
களுத்துறை மாவட்டம்: வலல்லாவிட்ட
கண்டி மாவட்டம்: கங்கவட கோரளை, உடுநுவர, உடபலாத, தும்பனே, பாதஹேவாஹெட, உடுதும்பர, கங்க இஹல கோரளை, பஸ்பாகே கோரளை, யடிநுவர
கேகாலை மாவட்டம்: ரம்புக்கணை, மாவனெல்ல, தெராணியாகல
குருநாகல் மாவட்டம்: மாவதகம, மல்லவபிட்டி
மொனராகலை மாவட்டம்: பிபல
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ, ஹங்குரன்கெத, வலப்பனை, நோர்வுட், கொத்மலை
இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல, பலாங்கொடை, கலவான, கொலொன்ன, இரத்தினபுரி
