உள்நாடு

78 இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இலங்கையை நோக்கி யாத்திரை

(UTV | கொழும்பு) –    78 இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இந்து யாத்திரையில் பங்கேற்பதற்காகவும், பழங்கால இராமாயணக் கதைகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடங்களைக் காணவும் இலங்கை வந்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் இன்று காலை இலங்கைக்கு வந்திறங்கி, இங்குள்ள இன்னும் சில இந்து கோவில்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் வழிகாட்டுதலின் கீழ் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே இக்குழுவினர் வருகை தந்துள்ளனர்.

மேலும் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் பிரபல கிரிக்கெட் வீரரும் இலங்கையின் சுற்றுலாத் தூதுவருமான சனத் ஜெயசூர்யா ஆகியோர்இது போன்ற சுற்றுலா ஊக்குவிப்பு முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி அடுத்த ஆறு மாதங்களில் 800 இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுக்களாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

டீசல் தட்டுப்பாடு : முடங்கும் பேரூந்து சேவை

அனுமதியின்றி சிவனொளிபாத மலைக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது!

லிட்ரோ எரிவாயு விலை குறித்து சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு!