உள்நாடு

74 வயதான யாழ், சிரேஷ்ட பிரஜை நற்கருமத்துக்காக நிதி திரட்ட 450 கிலோ மீற்றரை மிதி வண்டியில் பயணித்து சாதனை

3 தசாப்த காலத்துக்கு முன்பு அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்த பருத்தித்துறை – புலோலி கிழக்கை பிறப்பிடமாக கொண்ட 74 வயதுடைய செல்வத்தம்பி குலராசா யாழ்ப்பாண – புத்தூர் சென்ற் லூக்ஸ் மெதடிஸ்ற் மிஷன் வைத்திய சாலைக்கு (St.Luke’s Methodist Mission – hospital, Puttur) அத்தியாவசிய சுகாதார வசதிகளை பெற்றுக் கொடுக்கும் நன்நோக்கில் கொழும்பிலிருந்து 450 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வடபகுதி புத்தூர் நகரை மிதி வண்டி (cycle)மூலம் 3 நாட்களில் சென்றடை ந்து சாதனை படைத்துள்ளார்.

இந்தச் சவாரியில் அவரது இரு ஆண்பிள்ளைகள் உட்பட 70 மிதி வண்டியினர் (cyclists ) பங்கு பற்றியிருந்தனர்.

இதன் மூலம் £1,30,000 பவுண்ட் பணத்தை அவர்களால் திரட்ட முடிந்தது.

Related posts

இன்றும் 70 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்வு

மூன்று மாகாணங்களில் வாகன வருமான வரிப் பத்திர விநியோகம் தொடர்ந்தும் இடைநிறுத்தம்