உள்நாடு

70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

குறுகிய கால அடிப்படையில் 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது நெல்லுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.சேமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த நெற்செய்கையாளர்கள் தமது விவசாயத்தைத் தொடர்வதற்குத் தேவையான உரங்கள் கிடைக்காததன் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 1,133 சந்தேகநபர்கள் கைது!

இஸ்ரேலுக்கு இலங்கை தூதரகம் விடுத்த விசேட அறிவிப்பு!

இராணுவத்தின் அதிகாரிகளுக்கு வழங்க பட்ட சலுகை ரத்து