உள்நாடுபிராந்தியம்

70 அடி பள்ளத்தில் வீழ்ந்து வேன் விபத்து – 8 பேர் காயம்!

மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் வேனில் பயணித்த எட்டுப பேர் பலத்த காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (10) அதிகாலை 5:00 மணியளவில் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் தோட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் டெஸ்போட் பகுதி மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

-க.கிஷாந்தன்

Related posts

உள்ளுராட்சி தேர்தல் குறித்து இரு வாரங்களில் தீர்வு

ரணிலுக்கு எதிரான மனு பரிசீலனைக்கு திகதி நியமனம்

வெள்ள நீரை வடிந்தோட செய்வது தொடர்பாக இம்ரான் எம். பி மற்றும் பிரதேச சபை செயலாளர்களுக்கு இடையில் அவசர சந்திப்பு

editor