சூடான செய்திகள் 1

7 கிலோகிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது…

(UTV|COLOMBO) கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் வட்டுகோட்டை – சித்தன்கேணி பகுதியில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

குறித்த நபர் வசமிருந்து 7 கிலோ 200 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் மேலும் தெரிவித்தார்.

மேலும் குறித்த நபர் போதை பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பிறப்புச் சான்றிதழை மும்மொழிகளிலும் வழங்க நடவடிக்கை

ஐ.ம.சு.கூட்டமைப்பு- ஜனாதிபதி கலந்துரையாடல்

புத்தளத்தில் இன்று(15) ஹர்த்தால்..