சூடான செய்திகள் 1

7 கிலோகிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது…

(UTV|COLOMBO) கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் வட்டுகோட்டை – சித்தன்கேணி பகுதியில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

குறித்த நபர் வசமிருந்து 7 கிலோ 200 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் மேலும் தெரிவித்தார்.

மேலும் குறித்த நபர் போதை பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்

பொசொன் நோன்மதி வைபவத்தை சிறப்பாக கொண்டாட அரசாங்கம் முழுமையான அனுசரணை

இராணுவ சிப்பாய் கொலை தொடர்பில் இரண்டு சிப்பாய்கள் கைது