உள்நாடு

600 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

(UTV | கொழும்பு) –  சிறைக் கைதிகள் 600 பேரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சிறு குற்றங்களுக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சிறைக் கைதிகள் 600 பேரே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையக ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வெலிகடை சிறைச்சாலை, கொழும்பு மெகசின் சிறைச்சாலை, கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலை, மகர சிறைச்சாலை, குருவிட்ட மற்றும் பழைய போகம்பற சிறைச்சாலை ஆகியவற்றிலிருந்து கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மினுவாங்கொடை – பொலிஸ் நிலையத்தில் உள்ளவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

கூட்டுறவுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி படுதோல்வி

editor