உள்நாடு

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசியையும் செலுத்தக் கோரிக்கை

(UTV | கொழும்பு) –  சைனோபாம் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசியாக அஸ்ட்ராசெனகா, பைஸர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றை வழங்குமாறு இலங்கை மருத்துவ சங்கத்தினர் யோசனை முன்வைத்துள்ளனர்.

இலங்கை மருத்துவ சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கும் நோய் நிலைமை ஏற்படுவதாக சிலர் கடுமையான நோய் நிலைமைகளினால் பாதிக்கப்படுவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னெடுக்கப்படுகின்ற ஆய்வுகளில் 50 வயதுக்கு மேற்பட்ட அஸ்ட்ராசெனெகா, பைஸர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றை பெற்றுக் கொண்டவர்களில், நோய் நிலைமைக்கு ஆளாகின்றவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதோடு மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைவதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய சைனோபாம் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக அஸ்ட்ராசெனெகா, பைஸர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றை வழங்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் யோசனை முன்வைத்துள்ளது.

Related posts

பாண் விலை குறைப்பு

editor

இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று முதல் ஆரம்பம்

ஜுவைரியா மொஹிதீனுக்கு 2020 Front Line Defenders விருது