உள்நாடு

6 வகையான பயிர்களுக்கு இழப்பீடு – அமைச்சரவை அங்கீகாரம்

பயிர் சேதங்களுக்கான 6 பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரிசி, சோளம், உருளைக்கிழங்கு, மிளகாய், வெங்காயம் மற்றும் சோயாபீன்ஸ் ஆகிய பயிர்களுக்கு இவ்வாறு இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த டிசம்பர் 02 ஆம் திகதி வரையில் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட பயிர் சேதங்கள் தொடர்பில் விவசாய, காணி, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து வழமைக்கு

மிட்டாய் பொருட்களின் விலை குறைக்கப்படும்

விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு இறுக்கமான சட்ட நடவடிக்கை