உலகம்

6 மாதங்களாக கொரோனா இல்லை – சாதனை படைத்த நாடு

(UTV | தாய்வான்) –  தாய்வானில் 6 மாதங்களாக கொரோனா இல்லாத நாடாக மாறி சாதனை படைத்துள்ளது.

சீன குடியரசு நாடான தாய்வானில் கடந்த ஏப்.ரல் 12 ஆம் திகதி முதல் உள்ளூரில் எவருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 553 பேருக்கு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதுடன், 7 பேர் உயிரிழந்தனர். அதன்பின் கடந்த 200 நாட்களில் யாருக்கு தொற்று ஏற்படவில்லை என்பதுடன், கட்டுப்பாடுகளை தாய்வான் கடைபிடித்து வருகிறது.

உள்ளூர் அளவில் தாய்வானில் கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், கடந்த 2 வாரங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 20 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இதனால் எச்சரிக்கையை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் மக்களை தொடர்ந்து முகக்கவசம் அணியவும், அடிக்கடி கைகளைக் கழுவவும் வலியுறுத்தியுள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இஸ்ரேலில் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

editor

அமெரிக்கா கலவரத்தில் நான்கு பேர் பலி