அரசியல்உள்நாடு

6ஆம் தர பாடப்புத்தக உள்ளடக்க விவகாரம் தற்செயலானது அல்ல, திட்டமிடப்பட்டது – இம்ரான் எம்.பி

6ஆம் தர பாடப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை தொடர்பான விவகாரம் தற்செயலானது அல்லது.

அது திட்டமிடப்பட்டு சேர்க்கப்பட்டது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ஒரு பாடப்புத்தகம் பலரது தொடர்புகளைத் தாண்டியே வெளிவருகின்றது. எழுத்தாளர்குழு, தட்டச்சு செய்வோர், பக்க வடிவமைப்பாளர்கள், புரூவ் பார்வையாளர், இணைப்பளார்கள், பணிப்பாளர், மேற்பார்வையாளர் எனப்பலரது தொடர்புகளைத் தாண்டித் தான் ஒரு பாடப் புத்தகம் வெளிவருகின்றது. இந்த விடயங்களை புத்தகத்தின் ஆரம்ப பக்கங்களில் நாம் காணலாம்.

இந்நிலையில் ஒருபுத்தகத்தில் எந்தவொரு விடயத்தையும் யாரும் தனிப்பட்ட ரீதியில் இடையில் செருக முடியாது என்பது தெளிவாகின்றது.

இந்த வகையில் நோக்கும் போது 6 ஆம் தரப் பாடப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை தொடர்பான விவகாரம் தற்செயலானது அல்ல. அது திட்டமிட்ட அடிப்படையில் சேர்க்கப்பட்டதே என்பது தெளிவாகின்றது.

நமது நாட்டுக்கென்று சிறந்த கலாசார பாரம்பரியங்கள் இருக்கின்றன. இந்தக் கலாசாரங்களை சிதைப்பதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும்.

பொதுமக்களின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக விசாரணை நடத்தப்படுகின்றது எனக் கூறி காலங்கடத்தும் செயற்பாடு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது.

எனினும், இந்த விடயத்தில் யாரும் தவறு செய்தவராக அடையாளப்படுத்த பட மாட்டார் என்பது யதார்த்தமாகும். காலம் இதற்கு பதில் சொல்லும். ஏனெனில் திட்டமிட்ட அடிப்படையில் பொதுவாக எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்திற்கு யாரை குற்றஞ்சாட்ட முடியும் கேட்க விரும்புகின்றேன்.

கல்வி அமைச்சருக்கு இது போன்ற குழுக்களோடு தொடர்பு உள்ளது என்ற விமர்சனம் கடந்த காலங்களில் வெளிவந்ததை பொதுமக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என நம்புகின்றேன்.

எனவே, அவர் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி தனக்கு பிடித்த கொள்கையை பாடப்புத்தகத்தில் உள்வாங்கியுள்ளார் என்பதில் என்ன சந்தேகமுள்ளது.

இவர் தொடர்ந்து கல்வி அமைச்சராக இருந்தால் நமது கலாசார, பாரம்பரியங்களை சிதைத்து விடுவார். இதனால் தான் நாம் கல்வி அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றோம்.

Related posts

ரணிலுக்கெதிரான மனு தள்ளுபடி.

editor

குளியாப்பிட்டியில் கோர விபத்து – மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் – சாரதிக்கு விளக்கமறியல்

editor

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

editor