உள்நாடு

51 பொலிஸ் பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு

51 பொலிஸ் பரிசோதகர்கள் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

போட்டி பரீட்சையின் அடிப்படையில் இந்த ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்காக உப பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் பரிசோதகர் மற்றும் தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் ஆகிய தரங்களில் சேவையாற்றியவர்களும் அடங்குகின்றனர்.

3 பெண் பொலிஸ் பரிசோதகர்களும், 2 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது

Related posts

VIP லைட் விவகாரம் – அர்ச்சுனா எம்.பி பொலிஸாருடன் வாக்குவாதம்

editor

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்

editor