உள்நாடு

5,00,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முயன்ற மூவர் கைது!

ஆயுர்வேத மருத்துவ கவுன்ஸிலிடமிருந்து பாரம்பரிய மருத்துவச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள 500,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முயன்றதாக சந்தேகத்தில் தொழிலதிபர்கள் மற்றும் அரசு சாரா நிறுவன ஒருங்கிணைப்பாளர் உட்பட மூவரை இலஞ்ச விசாரணை ஆணைக்குழு கைது செய்தது.

பனமுராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

களனியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், பிலிமத்தலாவையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் மற்றும் நாவலப்பிட்டியைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனம் ஒன்றின் ஒருங்கிணைப்பாளர் என இவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று (22) கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் இலஞ்சம் பெற முயன்றபோதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

Related posts

புதிய அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

editor

தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க ஜனாதிபதி பணிப்பு

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படும்!