உள்நாடு

5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று முதல்

(UTV | கொழும்பு) –  கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான 5,000 ரூபா நிவாரண நிதி, இன்று (20) பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள 75000 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளதுடன், இதற்காக 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத்தினால் நிதியமைச்சில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, இந்த நிவாரணம் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆசிரியர்களுக்கு நேர்முகத் தேர்வு!

உலகில் அதிக வாகன விலையை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியானது – இலங்கை?

editor

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனேடிய பெண் ஒருவர் போதைப்பொருளுடன் கைது

editor