சூடான செய்திகள் 1

500 பாடசாலை கட்டடங்கள் ஒரே நாளில் இன்று மாணவர்களிடம் கையளிப்பு

(UTVNEWS| COLOMBO) – அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் 10,000 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட 500 பாடசாலை கட்டடங்கள் ஒரே நாளில் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று(09) இடம்பெறவுள்ளது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஹொரணை – கஹதுடுவ வெனிவெல்கொல சிஷ்யோதா விசேட கல்வி மற்றும் உள்ளக கல்வி தொடர்பான தேசிய நிறுவகத்தில் குறித்த இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

மேலும், இந்நிகழ்வுடன் நாடுமுழுவதும் நிர்மாணிக்கப்பட்ட 500 பாடசாலை கட்டடங்கள் இன்று பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டமானது 65,000 மில்லியன் ரூபா முதலீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இதன்மூலம் 9064 பாடசாலைகள் பயனடையவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மின்கம்பம் விழுந்ததால் புகையிரத சேவை பாதிப்பு

இலங்கை தரப்பில் தவறுகள் இடம்பெற்றுள்ளன

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 801 ஆக அதிகரிப்பு