உள்நாடு

500 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய

போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் சில அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரம் பொலிஸ் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதாள உலகக் குழுக்கள், திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் என்பனவற்றை நாட்டிலிருந்து ஒழிப்பதற்காக அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

Related posts

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கோர விபத்து – மாணவியும் தாயும் படுகாயம்

editor

கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள திருகோணமலை, தம்பலகாமம்

editor

9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.

editor