விளையாட்டு

50 விக்கெட்டுக்களை வீழ்த்தி பும்ரா சாதனை

(UTVNEWS|COLOMBO) – இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 விக்கெட்டுக்கள் கைப்பற்றி, அதிவேகமாக 50 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார் பும்ரா.

மேலும், மூன்று வகை (டெஸ்ட், ஒருநாள், டி20) கிரிக்கெட்டிலும் 50 விக்கெட்டிற்கு மேல் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Related posts

பிரபல கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு 8 ஆண்டுகள் தடை

இரு முக்கிய பிடியெடுப்புக்களை தவறவிட்ட இலங்கை வீரர்களால் மாறிய போட்டி:கலங்கிய மாலிங்க

5 விக்கட்டுக்கள் மற்றும் 83 ஓட்டங்களை பெற்று இலங்கையை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்ற ஜயசூரிய! (படங்கள் இணைப்பு)