உள்நாடு

5 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் திருப்பியனுப்பப்பட்டன!

ஈரான் கட்டாரிலுள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கான 5 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

அதன்படி, மஸ்கட் விமான நிலையம் மற்றும் டுபாய் விமான நிலையத்திற்கு தலா இரண்டு விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ஒரு விமானம் ரியாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஃபிட்ஸ்ஏர் விமானம் துபாய்க்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

இந்த விமானங்கள் குவைத், அபுதாபி மற்றும் தோஹாவுக்கு பறந்து கொண்டிருந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் தரையிறங்க ஏதேனும் விமானங்கள் கோரப்பட்டால், மத்தள விமான நிலையமும் கட்டுநாயக்க விமான நிலையமும் தயாராக இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்களுக்கு வழங்குங்கள் – சவூதி தூதுவர் அநுர அரசிடம் கோரிக்கை

editor

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏகமனதான தீர்மானம்

சட்டத்தரணிகள் சங்கம் கடும் எச்சரிக்கை!

editor