உள்நாடுவிளையாட்டு

5 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி

இலங்கை கிரிக்கெட் அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

ஹராரே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது

இதன்படி முதலில் தடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

சிம்பாப்வே அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பென் கரன் 79 ஓட்டங்களையும், சீக்கந்தர் ராசா 59 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

இதன்படி இலங்கை அணிக்கு 278 என்ற ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது

278 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து போட்டியின் வெற்றியிலக்கை கடந்தது

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸங்க சதம் கடந்தார்.

அவர் இந்த போட்டியில் 122 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.

இந்த நிலையில் 2 போட்டிகளையும் வென்ற இலங்கை அணி இந்த ஒருநாள் தொடரை ​2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருபதுக்கு 20 தொடர் செப்டம்பர் 3, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது

இந்த மூன்று போட்டிகளும் ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணிலை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் 

editor

லுனாவ துப்பாக்கி சூடு – பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது