தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (05) மாலை 4 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், மேலும் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் 150 மி.மீ.க்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், சரிவுகள் இடிந்து விழுதல், பாறைகள் புரளுதல், நிலம் தாழிறங்குதல் மற்றும் மண்திட்டு சரிதல் போன்ற அபாயங்களிலிருந்து விலகி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் சிவப்பு அறிவித்தல் மூலம் அறிவுறுத்தியுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிரதேசங்கள்:
கண்டி மாவட்டம்
கங்கவட்ட கோரளை
தெல்தோட்டை
தொழுவ
தும்பனே
மெததும்பர
மினிப்பே
பாதஹேவாஹெட்ட
யட்டிநுவர
கங்கா இஹல கோரளை
அக்குரணை
உடுநுவர
பன்வில
பாததும்பர
குண்டசாலை
பஸ்பாகே கோரளை
ஹதரலியத்த
உடுதும்பர
பூஜாப்பிட்டிய
ஹரிஸ்பத்துவ
உடபலாத
கேகாலை மாவட்டம்
கலிகமுவ
கேகாலை
மாவனல்லை
ரம்புக்கனை
தெஹியோவிட்ட
வரக்காபொல
தெரணியகல
புளத்கொஹுபிட்டிய
ருவான்வெல்ல
யட்டியாந்தோட்டை
அரநாயக்க
குருநாகல் மாவட்டம்
நாரம்மல
மாவத்தகம
மல்லவபிட்டிய
அலவ்வ
ரிதிகம
பொல்கஹவெல
மாத்தளை மாவட்டம்
இரத்தோட்டை
வில்கமுவ
உக்குவளை
பல்லேபொல
மாத்தளை
லக்கல பல்லேகம
யட்டவத்த
நாவுல
அம்பங்கல கோரளை
நுவரெலியா மாவட்டம்
நில்தண்டஹின்ன
வலப்பனை
ஹங்குரான்கெத்த
மத்துரட்ட
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி 75 மி.மீ. இற்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளதால், மழை தொடருமானால் மண்சரிவு, சரிவுகள் இடிந்து விழுதல், பாறைகள் புரளுதல், மண்திட்டு சரிதல் மற்றும் நிலம் தாழிறங்குதல் போன்ற அபாயங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பின்வரும் மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டம்
ஊவா பரணகம
கந்தேகெட்டிய
பண்டாரவளை
சொரணத்தோட்டை
ஹாலிஎல
மீகஹகிவுல
பதுளை
எல்ல
ஹப்புத்தளை
லுணுகல
வெலிமடை
பசறை
ஹல்துமுல்ல
நுவரெலியா மாவட்டம்
நுவரெலியா
அம்பகமுவ கோரளை
தலவாக்கலை
நோர்வுட்
மேற்கு கொத்மலை
கிழக்கு கொத்மலை
இரத்தினபுரி மாவட்டம்
கஹவத்தை
கொடகவெல
கொலன்ன
