அரசியல்உள்நாடு

5 மணிநேர வாக்குமூலம் – சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் சிவநேசத்துரை சந்திரகாந்தன்

குற்றப் புலனாய்வுப் பிரிவில் 5 மணிநேர வாக்குமூலம் வழங்கிய பிள்யைான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அங்கிருந்து வெளியேறினார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளியொன்றில் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா என்பவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

அதில் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல்தாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் அவர் வெளிப்படுத்திய இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் அங்கு முன்னிலையாகி 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதையடுத்து, அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

Related posts

மீண்டும் மின்சாரம் தடைப்படும் சாத்தியம்

இரா. சாணக்கியனின் மட்டக்களப்பு மக்கள் சந்திப்பு காரியாலய பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளது

பென்சில்கள் குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் – மருத்துவர்கள் எச்சரிக்கை

editor