அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

5 இராஜாங்க அமைச்சர்களை பதவி நீக்கிய ஜனாதிபதி ரணில்

5 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கியுள்ளார்.

இதற்கமைய, இராஜாங்க அமைச்சர்களாக கீதா குமாரசிங்க, சஷீந்திர ராஜபக்ஷ, அமித் தேனுக விதானகமகே, பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி. சானக ஆகியோர் குறித்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47(3) (அ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கத்தாரின் பிரபல புகைப்பட போட்டியில் இடம்பிடித்த இலங்கை இளைஞர்!

வௌிநாடு செல்லும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

PIN இலக்கத்தின் காலம் நீட்டிப்பு – உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு

editor