உள்நாடு

4,874 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

(UTV | கொழும்பு) – முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 44 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தற்போது 4,874 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்றைய தினம் (12) வரை 12, 856 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து, வீடுகளுக்குச் சென்றுள்ளனரென, இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் 271 பேர்,  பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினத்துக்குள் இவர்களையும் வீடுகளுக்கு அனுப்ப முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

மக்கள் ஆணையினை ஏற்கத் தயார்

ஆசிரியாரால் கடுமையாக தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

எரிபொருள்கள் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது