வகைப்படுத்தப்படாத

48 ஆடுகளை ஏற்றிச்சென்ற மூன்று பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – இறைச்சிக்காக கொல்லும் நோக்கில் சிற்றூர்ந்து ஒன்றில் 48 ஆடுகளை ஏற்றிச்சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாரியபொல – சிலாபம் பிரதான வீதியில் ரபோவ சந்தியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் குருணாகல், கடுபொத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என வாரியபொல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சேதனை நடவடிக்கையின் போது குறித்த சிற்றூர்து கைப்பற்றப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்கள் இன்று, வாரியபொல நீதவான் நீதிமன்றில் முன்னிநிலை செய்யப்படவுள்ளனர்

Related posts

35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் பிரசவம் பார்த்த இந்திய டாக்டர்

இரு அரச தலைவர்கள் அடுத்தவாரம் இலங்கை விஜயம்

யொவுன்புர இளையோர் முகாம்