சூடான செய்திகள் 1

48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் புகையிரத சேவை

(UTV|COLOMBO)-ரயில் சாரதிகள், பாதுகாவலர்கள், ரயில்வே கட்டுப்பாட்டளர்கள், ரயில்வே நிலைய அதிபர்கள் மற்றும் கண்காணிப்பு மேலாளர்கள் ஆகியோர் எதிர்வரும் 26ம் திகதி இரவு முதல் 48 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இன்று(11) காலை கூடிய ரயில்வே இயக்குநர்களின் தொழிற்சங்க கூட்டணியின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளதாக, ரயில்வே லொகோமோடிவ் இன்ஜினியர்களது சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அமைச்சரவையினால் அனுமதிக்கப்பட்ட எம்.பீ. 1 மற்றும் 2 சம்பள அளவினை வழங்குதல் தாமதம் தொடர்பிலேயே எதிர்ப்பினை தெரிவித்து குறித்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

 

 

 

 

Related posts

காலி வீதியை பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு

சர்ச்சைக்குரிய மத போதகர் விவகாரம்- ஜம்மியதுல் உலமா அறிக்கை

(UPDATE)-ஆமர் வீதியில் துப்பாக்கி சூடு