உள்நாடு

47 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 47 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில், கடற்படையின் வடக்கு மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைகள் இந்த மீனவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் வந்த ஐந்து படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சாமர சம்பத் விளக்கமறியலில்

editor

பொது மன்னிப்பு கைதிகளின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிப்பு 

திருகோணமலையில் நிலநடுக்கம்!