கிசு கிசு

450 கிராம் பாண் ஒன்றின் விலை 350 ரூபா?

(UTV | கொழும்பு) –  ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 450 ரூபாவாக அதிகரித்தால், 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 350 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலைமையைத் தடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நுகர்வோர்கள் மட்டுமின்றி தாங்களும் கடும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக நாடளாவிய ரீதியில் பல்வேறு விலைகளில் பாண் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

எவ்வாறாயினும், இந்த சூழ்நிலையில், பாண் உட்கொள்வதை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related posts

2019ம் உலகக் கிண்ண போட்டியில் பாகிஸ்தான் அணி களமிறங்குமா?

மோசடிகள் ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தப்படும்…

இந்த அரசாங்கத்தை உடனடியாக கலைக்க வேண்டும்…