இந்தியாவின் ராஞ்சியில் இன்று (26) நடைபெற்ற தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்போட்டியில் அயோமல் அகலங்க வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அவர் தனது போட்டியை 50.29 வினாடிகளில் முடித்து இந்தப் பதக்கத்தை வென்றார்.
கடைசி சில மீட்டர் வரை அகலங்க முன்னிலையில் இருக்க முடிந்தாலும், கடைசி நேரத்தில் தங்கப் பதக்கம் அவரிடமிருந்து பறிபோனது.
இந்திய தடகள வீரர் பந்தயத்தை 50.10 வினாடிகளில் முடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
இதற்கிடையில், இந்த போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.
